Skip to content

 • Sinhala (Sri Lanka)
 • English (United Kingdom)
 
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முன்பக்கம்
 
லெப்டோஸ்பைரோஸிஸ் - எலிக் காய்ச்சல

லெப்டோஸ்பைரோஸிஸ் என்பது உலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு தொற்று நோயாகும். இது உஷ்ண வலயத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அதிகளவில் காணப்படுகிறது. இது ஒரு விலங்குகளினால் பரவூம் நோயாகும். விஷேடமாக மாரிகாலம் மற்றும் வெள்ள நேரங்களில் வெளிப்படும். இலங்கையில் இந்நோயினால் வருடாந்தம் 1000 – 2000 வரையான நோயாளர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதுடன் நெல் விவசாயிகளில் மிக அதிகமாகவூம் காணப்படுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழக விலங்கு வைத்தியபீட டாக்டர் ஜயந்த ராஜபக்ஸ அவர்களது அறிக்கையின்படி இலங்கையில் 10இ000 பேர் இந்த நோயக்கு ஆளானதாய் அறிக்கையிடப்பட்டுள்ளனர்இ அதில் 500 பேரளவில் மரணமடைந்துள்ளனர். இந்த நோயை அடையாளம் காண்பது சிரமம் ஆகையால் இந்தக் கணிப்பீடு மிகவூம் குறைவானது என நம்புவதற்கு இடமுண்டு. லெப்டோஸ்பைரோஸிஸ் நோய்த் தாக்கத்துக்குட்பட்டோர் மாத்தறைஇ கம்பஹாஇ களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோய்க் காரணி
எலிக் காய்ச்சலினை ஏற்படுத்துவது லெப்டோஸ்பைரஸ் எனும் ஒரு வகை பக்ரீரியாவாகும். இந்த பக்ரீரியா எலிஇ கீரிஇ ஊனுண்ணிகள்இ கால்நடைகள்இ மற்றும் வன முலை!ட்டிகளின் சிறுநீரகத்தில் காணப்படுகின்றன.

நோயூருவாதல்
உடலில் வெட்டுக் காயங்கள்இ கீறல்கள்இ கண்ணுக்குத் தெரியாத சிராய்ப்புகள் போன்றவற்றுடன் வயலில் வேலை செய்கையில்இ வயலுக்கு அண்மையில் உள்ள ஓடாத நீர் தங்கியூள்ள இடங்களில் குளிக்கும் பொழுதுஇ எலியின் சிறுநீர் கலந்த நீரினை குடிப்பதற்கோ அல்லது வாய் கழுவூவதற்கோ பாவிக்கும்பொழுதுஇ காயங்க@டாகவோ அல்லது வாய் மூக்கு கண்களிலுள்ள மெல்லிய படலங்கள் ஊடாகவோ நோயறிகுறிகளற்ற ஆனால் நீண்ட காலத் தொற்றுக்குட்பட்ட மிருகங்களின் சிறுநீரிலிருந்து கிருமிகள் உடலினுள் நுழையலாம். பின்னர் கிருமிகள் குருதியில் கலந்து சகல இழையங்கள் மற்றும் அங்கங்களைத் தாக்குகின்றன. நோய்க் கிருமி உடலில் நுழைந்து 1-2 வாரத்தில் நோய் அறிகுறிகள் தென்படலாம்.

நோய் அறிகுறிகள்

ஆரம்பத்தில்

 • சடுதியான காய்ச்சல்இ மற்றும் குளிர்
 • தசைகளில் கடுமையான வேதனை விஷேடமாக இடுப்பு மற்றும் கால்தசை
 • கண்கள் கடுமையான சிவப்பாக மாறுதல்
 • ஓங்காளம்இ வாந்தி
 • தலையிடி
 • உடல் பலவீனம்
 • சிறு நீர் கடுமையான மஞ்சள் நிறமாதல்

வது கட்டம்

நோயெதிர்ப்பு சக்தியின் காரணமான ஒரு சிறிய நோயற்ற இடைவெளியின் பின் மூளையின் போர்வை அழற்சிஇ இருதயத்தசை அழற்சிஇ சிறுநீரக அழற்சிஇ ஈரலழற்சிஇ மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். 90 வீதத்துக்கு அதிகமானோர் சுகமடைய சிலருக்கு சிறுநீரகம் மற்றும் ஈரல் ஆகியவை செயலிழக்கலாம்.

மோசமான விளைவூகள்.
சிறுநீரகம்இ இருதயம் ஆகியவை செயலிழத்தலும் பரவலான குருதிப் பெருக்கும் மரணத்துக்குக் காரணமாகலாம். அரிதாக ஈரல் செயலிழப்பும் பங்களிப்புச் செய்யலாம். தொற்று நோயியல் பிரிவின் அறிக்கைப்படி மரண வீதம் 5 – 30 வீதமாகும்.

கையாள்தல் - சிகிச்சை
தொழில் ரீதியாக நோய்க்க கிருமியூடனான தொடர்பு இருக்குமானால்இ நோய் பற்றிய உயர் சந்தேகம் மிகவூம் அவசியமானது. நோய் நிர்ணயம் பிரதானமாக கிருமிக்குரிய பிறபொருளெதிரியினைக் கண்டுபிடிப்பதிலேயே தங்கியூள்ளது.

லெப்டோஸ்பைரோஸிஸ் ஒரு கடுமையான நோயானாலும் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகும். நோய் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகப்பட்டவூடனேயே ஆய்வூகூட அறிக்கையை எதிர்பாராது கிருமியெதிர்ப்புச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும். உடலின் நீர்ச்சமநிலை மற்றும் கனியூப்புக்களின் சமநிலை அதற்கு ஆதரவாய் அமையூம். சிறுநீரகம் செயலிழந்தால் இரத்தச் சுத்திகரிப்பு அவசியப்படும்.

நோயிலுருந்து தவிர்ந்து கொள்ளலும் சுகாதார மேம்பாடும்.
நீங்கள் விவசாயம்இ சுரங்கவேலைஇ வடிகான்கள் சுத்திகரிப்பு ஆகிய வேலைகளில் ஈடுபட்டிருந்தால் ஆழுH மல்லது PHஐக்கு அறிவியூங்கள். அவர்கள் உங்களுக்கு எப்படி நோயிலுருந்து தவிர்ந்து கொள்வது என விளக்குவர். கீழ்க் குறிப்பிடப்படும் விஷேட நடவடிக்கைகள் லெப்டோஸ்பைரோஸிஸ் நோயிலுருந்து தவிர்ந்து கொள்வதற்கு உதவலாம்.

 1. மனிதக் குடியிருப்புக்களைச் சூழவூள்ள பகுதிகளை எலிகளற்ற பகுதகளாகப் பேணுங்கள்
 2. மிருகங்களை பிள்ளைகள் விளையாடக்கூடிய இடங்கள் மற்றும் தோட்டம்இ மைதானம் போன்றவற்றிலிருந்து தள்ளி வைத்திருக்கவூம்.
 3. உங்களது பயிர்நிலம்இ வயல் மற்றும் அதனைச்; சூழவூள்ள பிரதேசங்களைச் சுத்தமாக வைத்திருங்கள்.
 4. கொதித்த ஆறிய நீரை மட்டுமே அருந்துங்கள்இ நேரடியாக ஆறுஇ குழங்களிலிருந்து தேங்கிய நீரை அருந்த வேண்டாம்.
 5. வெள்ள நீரில் நடப்பதனைத் தவிருங்கள்
 6. டொக்ஸிசிலின் நோய்த் தொற்றுக்கு எதிராக ஓரளவூ பாதுகாப்புத் தருவதாக அறியப்பட்டுள்ளது
 7. தொழில் வேலைகள் செய்கையில் கைஇ கால்களுக்கு பாதுகாப்பு உறைகளை – (முழங்கால் வரை உயர்ந்த சப்பாத்துஇ பாதுகாப்பான உடைஇ கையூறை) அணிந்து கொள்ளுங்கள். காயங்களை நீர் புகா வண்ணம் மூடிக் கொள்ளுங்கள்.
 8. நீர் தேங்கியூள்ள இடங்களிலிருந்து நீர் வடிந்து செல்ல இடமளியூங்கள்.
 9. வயல் மற்றும் நீர் தேங்கியூள்ள இடங்களில் அனாவசியமாக இறங்குதல்இ குளித்தல்இ கை கால் முகம் வாய் கழுவூதல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.
 10. குளித்தல்இ மற்றும் குடிப்பதற்கு நீர் பெறும் பாதுகாப்பற்ற கிணறுகள் மிருகங்களின் மலம்இ சிறுநீர் ஆகியவற்றினால் மாசுபட்டு அசுத்தமாவதைத் தவிர்ப்பதற்கு கிணற்றினைச் சுவரினால் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

தமிழில் டாக்டர். எஸ். நஜிமுதீன்

 

பிரதான பட்டியல்