Skip to content

  • Sinhala (Sri Lanka)
  • English (United Kingdom)
 
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : முன்பக்கம்
 
டெங்குக் காய்ச்சல்

டெங்குக் காய்ச்சல், டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல், (எலும்பு உடைக்கும் காய்ச்சல்), டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை)

நோயின் தீவிரத்தைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் இந்த நோய் காணப்படுகிறது

அறிமுகம்

டெங்குக் காய்ச்சல்இ டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல்இ எனப்படுவது நுளம்பினால் பரவூம் உஷ்ண மற்றும் உஷ்ண அயல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை வைரஸ் நோயாகும்.. முக்கியமாக ஈடிஸ் இஜிப்ரி வகையைச் சார்ந்த பெண் நுளம்பு பாதி வீட்டுடன் தொடர்பானதாதலால் அது மனிதனால் உருவாக்கப்பட்ட நீர் சேகரிப்பு இடங்களில் முட்டையிட விரும்புவதுடன், வீட்டிலேயே தங்கி காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும் இரத்தம் உறிஞ்சி வாழுகின்ற ஒன்றாகும். இந்த வைரஸில் 4 நீர்ப்பாய வகைகள் உள்ளன. டெங்குக் காய்ச்சல் அதிகமாகப் பருவமழை காலங்களின் பின் அதிகரிப்பது இலங்கையில் வழமையாகும்.

இலங்கையின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையின்படி 2009 ம் ஆண்டில் இலங்கையில் 32713 நோயாளர்கள் அறிக்கையிடப்பட்டுள்ளனர். அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகக் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகியவை காணப்படுவதுடன், அதிகளவூ நோயாளரும் மரணங்களும் இந்த மாவட்டங்களிலிருந்தே அறிவிக்கப்பட்டுள்ளன.

நோய்க் காரணி

டெங்கு வைரஸ் :- இந்த ஒற்றை இழையூடனான சுNயூ – குடயஎi எசைனையந - வைரஸில் 4 நீர்ப்பாய வகைகள் உள்ளன.

நோயூண்டாகும் முறை

நுளம்பு கடித்தவூடன் மனிதர் தொற்றுக்குட்படுகின்றனர். உடனே வைரஸ் நிணநீர்க் கணுக்களுக்குச் சென்று பெருகி பின்னர் இரத்தச் சுற்றௌட்டத்துக்கும் ஏனைய இழையங்களுக்கும் செல்கின்றது. நீர்ப்பாய வகை 2 ஐச் சேர்ந்த வைரஸினாலேயே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

நோய் அறிகுறிகள்.

நோயின் தீவிரம் மாறுபட்டது

  • நோயரும்பு காலம் 2 – 7 நாட்களாகும்.
  • டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் அறிகுறிகள் திடீர் காய்ச்சல் (39.5 - 41ஊ) மற்றும் தசைநோவூ
  • காய்ச்சல் இரண்டு கட்டங்களையூம் இரண்டு உச்சங்களையூம் கொண்டதாகும்.
  • காய்ச்சல் முன்தலை அல்லது கண்ணுக்குப் பின்னான தலையிடியூடன் 1 – 7 நாட்கள் நீடிக்கக் கூடியதும் ஆகும். அத்துடன் சிறிய வெளிறக்கூடிய தோல்புள்ளிகளையூம் கொண்டிருக்கலாம்.
  • தோல்புள்ளிகள் 1 -2- நாட்களில் மறையக் கூடியது.
  • நோய் அறிகுறிகள் இரண்டொரு நாட்களில் குறைந்து மீண்டும் தோல்புள்ளிகள் தடித்த நிலையில் உள்ளங்கைஇ உள்ளங்கால் ஆகிய இடங்கள் தவிரந்த இடங்களில் ஏற்படலாம். காய்ச்சல் சிறிய அளவில் உண்டாகும்இ தோல் உரியத் தொடங்கலாம்.
  • டெங்குக் காய்ச்சல் நோயாளிகளுக்குக் கால்கள்இ மூட்டுக்கள்இ இடுப்பு போன்றவற்றில் கடுமையான எலும்பு மற்றும் தசை நோவூ சில வாரங்களுக்குக் காணப்படும் ( அதனாலேயே எலும்பு உடைக்கும் காய்ச்சல் எனப்படுகிறது)
  • ஓங்காளம்இ வாந்திஇ ருசி மாற்றம்இ பசியின்மை ஆகியன பொதுவானவை.
  • வயிற்று நோவூ ஏற்படலாம்இ அது தீவிரமாக இருப்பின் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் என சந்தேகப்பட வேண்டும்.

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் அறிகுறிகள்

  • கூடுதலான காய்ச்சல், தோல் புள்ளிகள், இரத்த அழுத்தம் குறைவடைதல், குறுகிய நாடி அழுத்தம், மயிர்த்துளைக் குழாய்களில் இரத்தம் நிரம்பும் வீதம் குறைவடைதல்.
  • ஈரல் மற்றும் நிணநீர்க் கணுக்களின் வீக்கம் காணப்படலாம்.
  • கையைச் சுற்றி ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கும்போது ஆரம்ப டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் நோயாளிகளில் அது தோலுக்கடியிலான குருதிப் பெருக்கினை ஏற்படுத்தும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் தோலுக்கடியிலான குருதிப் பெருக்கு, மூக்கிலிருந்து அல்லது முரசு, குடலிலிருந்து இரத்தப் பெருக்கு, அதிக மாதவிலக்கு ஆகியவற்றைக் காட்டலாம்.
  • நீர்பாயம் வெளியேறுவதால் நுரையீரல், இதயம் மற்றும் வயிறு போன்றவற்றில் நீர் சேரலாம்.
  • தோலுக்கடியிலான குருதிப் பெருக்கினை இரகுவில் கமுக்கட்டில் காணலாம்.
  • தலையூம் கழுத்தும் சிவந்திருக்கும்
  • தசைகள் தொடுகைக்கு வலியைக் காட்டும்
  • கண்களைச் சுற்றி வீக்கம்இ சலத்தில் புரதம் வெளியேறல்
  • கண்களுக்குள் குருதிப் பெருக்கு ஏற்படலாம்.
  • டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை நோயாளர் டெங்கு குருதிப் பெருக்கு நிலையினூடு சென்று குறைந்த குருதியமுக்கத்தினால் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்
  • நரம்பு மண்டலத்தின் பாதிப்பினால் மூளை பாதிக்கப்பட்டு மயக்கம் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்படலாம்.

பாரிய விளைவூகள்

  • ஈரல் செயலிழப்பு
  • மூளைப் பாதிப்பு – வலிப்பு, உணர்விழப்பு, நினைவூத் தடுமாற்றம்
  • இதயத்தசை அழற்சி
  • இரத்தக்குழாய் மற்றும் கலங்களின் பாதிப்பினால் இரத்தப் பெருக்கும் உறைவூம் ஏற்படல்.

டெங்கினால் மரணம் சம்பவிக்கலாம்

  • குடீஊ- குறைந்த குருதிச்சிறு தட்டுக்கள், கூடிய Pஊஏ, வழமையாக வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் குறையூம்
  • நீர்ப்பாயத்திலிருந்து வைரஸைப் பிரித்தெடுத்தல்,
  • நுடுஐளுயூ, ஆழழெ உடழயெட யவெiடிழனல, ழச Hநயஅயபபடரவiயெவழைn. போன்ற முறைகளால் ஐபபு ஐபஆ பதார்த்தங்களை அடையாளம் காணல்.
  • மூலக்கூறு நிர்ணய முறை – சுநஎநசளந வசயளெஉசipவயளநஇ- ஜஊசு முறைகள்
  • நெஞ்சின் எக்ஸ்ரே நுரையீரலைச் சுற்றிய நீர் சேர்வினைக் காட்டும்

சிகிச்சை முறை

  • கண்டிப்பான ஓய்வூ
  • போஷாக்கான உணவூ, மற்றும் அதிகளவூ பானங்கள்,( ஆனால் சிவப்பு, பிறவூன் நிற உணவூகள் மற்றும் சொக்கலேற், கோப்பி, திராடசை போன்றவற்றைத் தவிர்க்கவூம். இவை வாந்தி எடுக்கும் போது இரத்தம் போன்ற பிழையான சந்தேகத்தை ஏற்படுத்தும்)
  • காய்ச்சலினைக் கட்டுப்படுத்த பரசிற்றமோல், நீரினால் நனைத்தல், விசிறி போன்றவற்றைப் பயன்படுத்தவூம் - அஸ்பிரின் தவிர்க்கப்பட வேண்டும்.
  • 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் தகுதியான வைத்தியரை நாடவூம்
  • வைத்தியசாலைச் சிகிச்சை திரவ உட்செலுத்தல் உட்பட தீவிர கண்காணிப்பினைக் கொண்டுள்ளது. குருதிப் பெருக்கு, அதிர்ச்சி ஆகிய நிலையில் பதிய குளிரூட்டப்பட்ட பாயம்(Pடயளஅய) குருதிச்சிறு தட்டுக்கள் மற்றும் இரத்;தம் ஆகியன அவசியப்படலாம். அதிதீவிரக் கண்காணிப்பும் மோசமான குருதிப் பெருக்குஇ அதிர்ச்சி நிலையில் தேவைப்படலாம்.

தடுப்பும் சுகாதார மேம்பாடும்

  • தடுப்பு மருந்துகள் ஆய்வூக்குட்பட்டுள்ளன
  • நுளம்புக்கு எதிரான பொதுமக்களின் செயற்பாடுகள்- நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் ( பூச்சாடிகள், மீன் தொட்டிகள், டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், நீர் சேமிக்கும் தாவரங்கள், நீர் தேங்கும் பீலிகள்), மற்றும் சிறந்த கழிவகற்றும் நடைமுறைகள்
  • குடம்பிகளை அழிக்கும் கிருமிநாசினிகள்
  • நுளம்பு வலைகளை பகலிலும் பாவித்தல் - இந்த நுளம்புகள் பகலில் கடிப்பன.
  • நுளம்பு துரத்தும் மருத்துகள்
  • பசிலஸ் துரஞ்ஜியன்ஸிஸ் (டீயஉடைடரள வூhரசiபெநைளெளை) எனும் நுளம்பை அழிக்கும் பக்ரீரியா
 

பிரதான பட்டியல்