e - இலங்கை
e - இலங்கை என்பது தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலங்கையின் பொருளாரத்தத்தை அபிவிருத்தி செய்யவும்.வறுமையைக் குறைக்கவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் செயற்படுத்தப்படும் ஒரு முன்னேற்பாகும். இந்தத் தூரநோக்கு 5 செயல் நிகழ்ச்சித் திட்டங்கள்மூலம் அடையலாம். அவையாவன செயல்பாட்டுத்திறனை கட்டமைப்பது. தகவல் உட்கட்டமைப்பை உருவாக்குவது சூழல் அபிவிருத்தி செய்வது தகவல் தொடர்பாடல் மனித வளத்தை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கும் சேவைகளை நவீன மயப்படுத்துவது. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தை ஒரு விசைக் கருவியாக உபயோகித்து அரசாங்க தனியார் துறைகளின் பங்களிப்புடன் இலங்கையில் பொருளாதர சமூக அபிவிருத்தியினை ஏற்படுத்துவதாகும். தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICTA) என்ற கற்பாறையிலேயே நாம் சம வாய்ப்பும் அறிவுப்பங்கிடும் உள்ள ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அரசாங்கமும் தனியார்துறையினரும் மற்றும் முயற்சியாளர்களும் நம்புகின்றனர். மேலும் ஏனைய நாடுகளுடனான ஒப்பிட்டு நலன்களை தீர்மானிக்கும் ஒரு திறவுகோலாகவும் நாம் நம்புகிறோம்....
மேலதிக விவரங்கள் >>
 
 
e-சட்டங்கள்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பல நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்த தொடங்கியுள்ளது. இதற்கான சட்டங்களை மீள்பார்வை செய்யவும், புனரமைப்புச் செய்யவும் ஆலோசிக்கப்படுகிறது. அமைச்சரவையின் அண்மைக்கால தீர்மானப்படி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திக்கும் மற்றும் e- இலங்கை அபிவிருத்தித்திட்டத்தினை அமுலாக்கம் செய்வதற்கும் தேவைப்படும் ஒழுங்கமைப்பினையும் கொள்கைகளையும் தயாரித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யுமாறு ICTA ஐ கேட்டுள்ளது. 2003 ம் ஆண்டின் 27ம் இலக்க தகவல் தொடர்பாடல் ICTA விடம் (CINTEC ஐ பொறுப்பேற்றவர்கள்) இந்த நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை அமுல் நடாத்த உதவும் வகையில் தேசியக் கொள்கையையும் நடைமுறைத் திட்டத்தினையும் தயாரித்துத் தரும்படி கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ICTA சட்டச்சீர்திருத்தம் செய்வதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. e வணிகத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் சட்டவலுவினைப் பெறுவதற்கும் சட்டங்கள் தேவைப்படுகின்றன....
மேலதிக விவரங்கள் >>