|
உலக சுகாதார அமைப்பிலிருந்து வருகைதந்த நிபணர் ஒருவரினால் இந்நாட்டின் சுகாதாரக் கல்வி பற்றி மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர்‚ செய்யப்பட்ட விதந்துரைகளின் மூலம் மாற்றங்கள் சில கொண்டுவரப்பட்டன.
இந்நாட்டை சகாதாரக் கல்விப் பிரதேசங்கள் 15 ஆகப் பிரித்து சுகாதாரக் கல்விப் பணிகளுக்காக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. 1962 ஆம் ஆண்டிலே உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் சுகாதாரக் கல்வி உற்பத்தி அலகிற்கு நியமிக்கப்பட்டனர். மருத்துவ அதிகாரியொருவர்‚ சிரேட்ட மருத்துவ அதிகாரியொருவராக நியமிக்கப்பட்டு பொதுசன சுகாதாரச் சேவைகள் பற்றிய பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் உதவிப் பணிப்பாளர்ஃசுகாதாரக் கல்வி என்ற பதவிப் பெயர் வழங்கப்பட்டது. சுகாதார அமைச்சின் ஏனைய அலகுகளிலும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் பணியாற்றும் சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்கள் தொடர்பான நிருவாகம் மற்றும் ஆய்வுசார்ந்த அதிகாரம் என்பன சுகாதாரக் கல்வி பற்றிய உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சின் பல அலகுகளின் மீளமைப்புப் பணிகள் 1972 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றன. அதன்விளைவாக‚ சுகாதார உபகரண உற்பத்தி அலகு‚ சுகாதாரக் கல்விப் பணியகம் எனப் பெயரிடப்பட்டது. சுகாதாரக் கல்வி எண்ணக்கரு பற்றி நாட்டினுள் பாரியதொரு மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. சுகாதாரக் கல்வி பற்றிய உதவிப் பணிப்பாளர் என்ற பதவிப் பெயர் பணிப்பாளர் ஃ சுகாதாரக் கல்வி என மாற்றியமைக்கப்பட்டது. மருத்துவ அதிகாரிகள் குழுவொன்றும் பல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஒருவரும் மருத்துவ அதிகாரிஃசுகாதாரக் கல்வி என்ற பதவிகளுக்கு நியமித்து பொதுசன சுகாதாரம் பற்றிய பட்டப்பின் படிப்பினை மேற்கொள்வதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டனர். பிரதம சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் பதவி பிரதிப் பணிப்பாளர் ஃ சுகாதாரக் கல்வி என மீளமைக்கப்பட்டாலுங்கூட அந்தப் பதவிக்கு நிருவாக அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மேலும் இப்பதவி சுகாதாரக் கல்வி உத்தியோத்தர்களின் உச்ச தொழினுட்பப் பதவியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்கள் 15 பேரைக்கொண்ட முழுவானது அடிப்படைப் பட்டத்துடனான பொதுசன சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். 1975 ஆம் ஆண்டிலே சுகாதாரக் கல்வி பற்றிய டிப்புளோமாவுடனான பட்டதாரிகள் பன்னிரண்டு பேர் இந்தப் பிரிவிற்கு உள்ளீர்க்கப்பட்டனர். பிரிவு பற்றிய கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்து 1977 ஆம் ஆண்டு குடும்ப சுகாதார நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சமூக ஈடுபாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் 1982 ஆம் ஆண்டிலே சுகாதாரக் கல்வி பற்றிய விஞ்ஞானமாணிப் (ஆ.ளுஉ) பட்டமொன்றை ஆரம்பித்தமையினால் அந்தப் பாடநெறியைப் பயிலுவதற்கு கல்விப் பணியகத்தின் சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்புக் கிட்டியது. சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்கள் பட்டப்பின் படிப்பைத் தொடருவதற்காக வெளிநாடுகளுக்கு ஆனுப்பப்பட்டனர்.
1980 தசாப்தத்தின் பிற்பகுதியிலே அதிகாரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் மாவட்டங்களிலேயே சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்களிடம் காணப்பட்ட நிருவாக அதிகாரங்கள் மாகாணம்சார் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்களாக ஏனைய அலகுகளில் பணியாற்றிவர்களும் சுகாதாரக் கல்விப் பணியகத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.
சமூக மருத்துவம் பற்றிய முதுமாணிப் (ஆ.ளுஉ) பட்டத்துடனான மருத்துவ அதிகாரிகள் குழுவொன்று 1992 ஆம் ஆண்டு சுகாதாரக் கல்விப் பணியகத்திற்கு நியமிக்கப்பட்டனர். அதன்பின் அந்தக் குழு சமூக மருத்துவம் பற்றிய கலாநிதி (ஆ.யு) பட்டத்தி்னைப் பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து சமூக மருத்துவம் பற்றிய பட்டப்பின் படிப்பு தகைமையைக்கொண்ட மருத்துவ அதிகாரிகளும்‚ பல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும் இந்தப் பணியகத்திற்கு நியமிக்கப்பட்டனர். |